ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரமின்றி அவதூறு கருத்துகளைத் தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியிருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, வருண்குமாருக்கு எதிராக சீமான் பேசுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கு எதிரான இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் சென்னையில் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மனநல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது. விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரியானார். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்கில் சிறை சென்றவர் வருண்குமார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்ய வேண்டும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.