Advertisment

'அதைப்பற்றி இப்போது பேசுவது உகந்தது கிடையாது' -துரை வைகோ பேட்டி

42

'It's not appropriate to talk about it now' - Durai Vaiko interview Photograph: (durai vaiko)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மதிமுக எம்பி துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''எங்களது கோரிக்கைகளை கனிவான முறையில் கேட்டிருக்கிறார்கள். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை அல்லது சீக்கிரம் முடியும் நம்பிக்கையோடு இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இரு இயக்கங்களிடையே பேசுவது. அது ஒரு சுமுகமான ஒரு முடிவுக்கு வந்ததற்கு பிறகு கண்டிப்பாக உங்களை போன்ற பத்திரிகையாளர்கள், ஊடகங்களுக்கு கண்டிப்பாக நங்கள் எத்தனை இடங்களை பெற்றுள்ளோம் என்று தெரிவிப்போம்.

Advertisment

மதிமுகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இப்போது பேசுவது உகந்தது கிடையாது என்று நான் நினைக்கிறேன். கூட்டணி ஏற்கனவே கடந்த எட்டு ஒன்பது வருடங்களில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் போன்ற பல தேர்தல்களில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்ற கூட்டணிதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இப்பொழுது மேலும் சில இயக்கங்கள் நம்முடைய இந்த கூட்டணிக்கு வந்துள்ளதால் மிக கூட்டணி இன்னும் வலுவடைந்துள்ளது. ஆகையால் இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் கூட்டணி வலு மாத்திரம் கிடையாது, தமிழக அரசாங்கம் திமுக தலைமையில் நடந்த தமிழக அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளால் நிறைய நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கக்கூடிய நிறையத் தொழிற்சாலைகள் இங்க வந்திருக்கிறது.

அதே மாதிரி சமூக நீதி  நிலைநாட்டிட அடித்தட்டு மக்களுக்கு தேவையான பல திட்டங்களை கொடுத்திருக்கிறார்கள்.  இதன் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை மதசார்பற்ற முற்போக்கு அடையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வந்ததிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டு இந்த கூட்டணி மேலும் வலுவடைந்தது என்பதுதான் இன்னைக்கு நிதர்சன உண்மை.இந்த கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் ஏற்கனவே வலுவான கூட்டணி. இன்று பிற இயக்கங்கள் மேலும் இணைந்து மேலும் வலுவான கூட்டணியாக ஒரு அமைந்துவிட்டது'' என்றார்.

Election dmk alliance parties mdmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe