Advertisment

''விஜய்யை நினைத்தால் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது''-கடுமையாக விமர்சித்த அமைச்சர்

837

''It's a shame for us to think of Vijay'' - Minister harshly criticized Photograph: (dmk)

அமைச்சர் த.மோ.அன்பரசன் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Advertisment

அவரது உரையில், ''முந்தாநேத்து பிறந்தவர்கள் எல்லாம் திமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி என்கிறார்கள். டான்ஸ் ஆடுகிறார் பார்த்திங்களா? ஐயோ ஐயோ அவமானமாக இருக்கிறதுக்கு. எங்களுக்கு இவர்கள்கூட எல்லாம் அரசியல் நடத்த வேண்டும் என்று நினைத்தால் அவமானமாக இருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் போய் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். திட்டக்கூடாது திட்டக்கூடாது என்று சொல்கிறீர்கள் திட்டாமல் இருக்க முடியவில்லை.  

Advertisment

எங்கள் கட்சியினுடைய வயது 75. நாம் பார்க்காத ஆளா? நாம் செய்யாத சாதனையா? இந்த நாட்டில் கலைஞர் செய்யாத சாதனையா? அவர் செய்த சாதனையை யாராவது செய்ய முடியுமா? நமது தலைவர் செய்துள்ள சாதனையை போல் யாராவது செய்ய முடியுமா? 75 வருட கட்சி, எவ்வளவு பேரை பார்த்த கட்சி, எனக்கும் உனக்கும் தான் போட்டி என்கிறாயே எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. பார்த்து விடுகிறோம். இந்த முறை எல்லாரையும் பார்த்து விட்டோம் உன்னை பார்க்க மாட்டோமா.

சின்ன குழந்தைகளை, சின்ன பசங்களையெல்லாம் கெட்டு குட்டிச் சுவரா மாத்தினது விஜய் தான். படத்தில் குடிக்காமல் ஏதாவது படம் நடித்திருக்கிறாரா? நான் இப்பொழுது சொல்கிறேன் எங்களுடைய தலைவர் என்னை திட்டினாலும் பரவாயில்லை விஜய் நடித்த படங்களில் குடிக்காமல் எந்த படத்தில் நடித்திருக்கிறார். எந்த படத்திலாவது சிகரெட் பிடிக்காமல் நடித்துள்ளாரா? இன்னைக்கு இளைஞர்களை எல்லாம் சீரழித்தவர் யார் என்றால் அந்த நடிகன் தான். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நடிப்பை நான் கூட ரசிப்பேன், சினிமா பார்க்கிறேன் பொழுதுபோக்கு நல்ல நடிக்கிறான் அதோடு விட்டு விட்டு வந்து விட வேண்டும். அரசியல் வேறு நடிப்பு வேறு.

சந்தோஷமாக இருப்பதற்கு, டென்ஷனாக இருக்கும்போது சினிமா பார்க்கிறோம். சந்தோஷமாக இருக்கிறது என கைத் தட்டுகிறோம் அதோடு முடிந்துவிட்டது. தேர்தல் வந்துவிட்டது இனியும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது. என்ன விலை டிக்கெட்? படம் வந்தால் 2000 ரூபாய். சாதாரண பசங்க, ஏழை பசங்க தானே சும்மா படத்தை பார்க்க விட வேண்டியதுதானே? 2000 ரூபாய் ஒரு டிக்கெட். உண்டா இல்லையா? நீ வந்து ஜனங்களை காப்பாற்ற போறியா... இந்த நாட்டை பாதுகாக்க போறியா... தீய சக்தியாம் நாம். நான் என்ன சொல்கிறேன் நீ யோக்கியனாக இருந்தால் பிஜேபியை திட்டு. இதுவரை ஒரே ஒரு வார்த்தை கூட திட்டவில்லை. ஒப்பந்தம் போட்டு விட்டு வந்து விட்டார்கள் பிஜேபியை திட்டக்கூடாது, தனியா நிக்கணும், யார் கூடயும் கூட்டு போகக்கூடாது, ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு சிறுபான்மை ஓட்டு வரப்போகுது அதை பிரிக்க வேண்டும் இதுதான் ஒப்பந்தம். நீ எந்தப் பக்கம் போனாலும் சரி சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற ஒரே கட்சி திமுக'' என்றார்.

tvk vijay T.M.Anbarasan dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe