பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்  ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இந்நிலையில் அண்மையில் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் வெளியே புறப்பட்ட ராமதாஸ் காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டீர்களா?' எனக் கேள்வி எழுப்ப, ''ஆமாம் அப்படியும் எடுத்துக் கொள்ளலாம். விழுப்புரத்திற்கும், சேலத்திற்கும் செல்கிறேன்''என்றார்.

Advertisment

'ஒரு தரப்பு, பாமகவின் சின்னமான மாம்பழம் தங்களுக்கு தான் என தெரிவித்து வருகிறார்கள்' என்ற கேள்விக்கு, ''ஒரு தரப்பு அல்ல. ஒரு கும்பல் சொல்லிக் கொண்டு கிடக்கும். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து பார்த்தால்'' என்று கூறிய ராமதாஸ், மௌனமாக கீழே தலை குனிந்த படி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். இப்படி தலையை தொங்க போட்டபடி அமைதியாகி விடுவார்கள்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் 'பாமக இரண்டு அணிகள் அல்ல ஒரே அணி தான். தலைவர் அன்புமணி, நிறுவனர் ராமதாஸ் என சொல்கிறார்கள் என' அடுத்த கேள்வியை எழுப்ப முயல ''அட போப்பா...'' என தட்டிக்கழித்து விட்டு அங்கிருந்து ராமதாஸ் புறப்பட்டார்.

Advertisment