'It would be helpful if the government gave me a job' - Interview with Balamurugan, who won first place in Jallikattu Photograph: (jallikattu)
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (15-01-26) தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
Advertisment
இன்று நடைபெற்ற இப்போட்டியில், 1,000 காளைகள், 550 காளையர்கள் களம் இறக்கப்பட்ட திட்டமிடப்பட்டது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் 937 மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ளது. காலை 7:00 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6:30 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
Advertisment
இதில் 60 பேர் காயமடைந்துள்ளனர். 11 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசான காரை வலையங்குளம் பகுதி சேர்ந்த பாலமுருகன் என்ற மாடுபிடி வீரர் தட்டிச் சென்றுள்ளார். 22 காளைகளை அடக்கிய அவருக்கு 8 லட்சம் மதிப்புடைய கார் பரிசு வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது பரிசாக இருசக்கர வாகன வழங்கப்பட்டுள்ளது. 16 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ரஞ்சித் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் முதலிடம் பிடித்த விருமாண்டி பிரதர்ஸ் காளைக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.
முதலிடம் பிடித்த வலையன்குளம் பாலமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இந்த வெற்றியை விளாச்சேரி விஷ்வா அண்ணாவிற்கு நான் சமர்ப்பிக்கிறேன். கோயம்புத்தூரில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறேன். சின்னப் பிள்ளையிலிருந்து மாடு பிடித்து வருகிறேன். டிகிரி முடித்து இருக்கிறேன் கவர்மெண்ட் வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். மாடு பிடித்து வருபவர்களுக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும். முதலிடம் பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல இரண்டாவது மூன்றாவது இடம் பிடித்தவர்கள் என அனைவருமே கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறோம்'' என்றார்.
Follow Us