விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஜய்யுடன் அதிமுக கூட்டணி வைக்குமா அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்குப் பதிலளித்த அவர், ''விஜய் ஒரு ஸ்டார் நடிகர். அவருக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது. அதை மறுப்பதற்கு கிடையாது. அவருடைய நடவடிக்கைகள் குழந்தை முதல் பெரியவர் வரை அத்தனை பேரையும் கவர்ந்திருக்கிறது. அவை ஓட்டாக மாற வேண்டும் என்று சொன்னால் பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் அவருக்கு தேவை. அந்த பயிற்சியாளர்களாக தான் அதிமுக நிர்வாகிகள் இருப்பார்கள். கூட்டணிக்கு வந்தால் அவருக்கு நல்லது. வரவில்லை என்று சொன்னாலும் அதிமுகவிற்கு எந்த கெடுதலும் கிடையாது. அதிமுக ஓட்டு சதவீதம் கொஞ்சம் குறையுமே ஒழிய வெற்றினுடைய விளிம்பிலிருந்து இறங்கி வராது.நிச்சயமாக அதிமுக ஆட்சி தான் வரப்போகிறது. தவெக வந்தால் அதிமுக 220 சீட்டு. வரவில்லை என்றால் அதிமுக 150 சீட்டு''  என்றார்.

Advertisment

அப்பொழுது விஜய் வருவாரா என்ற கேள்விக்கு, ''வருவார். வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வருவது அவருக்கு நல்லது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. இது என்னுடைய கருத்து. அவர் வரவேண்டும் அல்லது தனியாக நிற்பது என்பது அவருடைய முடிவு. ஆனால் மக்களுடைய கருத்து என்ன தெரியுமா  திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு எல்லோரும் ஒன்றிணை வேண்டும். விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது இது எம்ஜிஆர் படத்தில் வரும் பாடல் வரி மட்டுமல்ல எல்லோர் இதயங்களில் இருக்கக்கூடிய மிகப்பெரிய இதயவீணை. விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது. விளம்பரத்தால் ஆட்சி எவ்வளவு நாட்கள் தூக்கிப் பிடிக்க முடியும். எவ்வளவு நாள் தான் உயர்த்தி பிடிக்க முடியும்''என்றார்.