அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளை இன்று (17-01-26) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலித்திய பின்னர்,  முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.  வாக்குறுதி 1, குலவிளக்கு  திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும்.

Advertisment
a1644
It would be even better if there was a 'triple engine' government - Tamilisai opinion Photograph: (ADMK)

வாக்குறுதி எண்.2, ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும். வாக்குறுதி எண்.3, அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அது போல், நகரப் பகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதை போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் அவருடைய மகன்கள் திருமணமாகி தனி குடித்தனம் செல்கின்ற போது அரசே இடம் வாங்கி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வாக்குறுதி எண்.4, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். வாக்குறுதி எண்.5, ரூ.25,000 மானியத்துடன் ரூ.5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மூலம் வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisment

அதிமுகவின் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதி பேசு பொருளாகி இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

''நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்திருக்கிறது. அதற்கான வாக்குறுதிகளும் எடப்பாடி பழனிசாமி மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் மும்பையில் தேர்தல் நடந்த பொழுது மத்தியிலும் மாநிலத்திலும் டபுள் என்ஜின் கவர்மெண்ட் இருந்தால் நல்லது என மக்கள் சொன்னார்கள். மாநகராட்சியிலும் இருந்தால் ட்ரிபிள் என்ஜின் கவர்மெண்ட் இருந்தால் மக்களுக்கு நல்லது என்று சொல்லிதான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதேமாதிரி இங்கே ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த நம்பிக்கை வெளிப்பாட்டின் உறுதியாக  திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை வரவேற்கத்தான் செய்கிறேன். நிதி நிர்வாகம் என்பது ஒவ்வொரு ஆட்சிக்கும் மாறுபடும்.  திராவிட முன்னேற்றக் கழகம் நிதி மேலாண்மையை சரியாக செய்யவில்லை. கடன் வாங்கி கொண்டு அவர்கள் இலவசத்தை கொடுத்தார்கள்.

ஆரம்பத்தில் உலகளவில் உள்ள ஐந்து பொருளாதார நிபுணர்கள் பெயரை அறிவித்தார்கள். ஆனால் பிறகு பொருளாதார மேம்பாட்டுக்கு அவர்கள் என்ன உதவி செய்தார்கள் என்றால் தெரியவில்லை. ஆனால் நிதி மேலாண்மை என்பது ஒவ்வொரு ஆட்சிக்கும் வேறுபடும். எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக கடன் மட்டுமல்லாமல் நிதிநிலையை பெருக்குவதும், நிதிநிலை எப்படி பங்கீட்டு கொடுத்து திட்டங்களுக்கு கொடுப்பது என அதற்கான திட்டங்களை மேற்கொள்ளலாம். அதனால் உறுதியாகவும் ஒரு தன்னம்பிக்கையோடும் அறிவித்திருக்கிறார்கள் என்றுதான் நான் சொல்ல முடியும்'' என்றார்.