'It would be better if Vijay joins BJP alliance' - Actress Kasthuri interview Photograph: (bjp)
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகையும், பாஜக பிரமுகரான கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'விஜய் தலைமையில் கூட்டணி அமையுமா?" என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தலைமையில் கூட்டணி என்பது சரியாக வராது என்று நினைக்கிறேன். ஏனென்றால் கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்கள் கூட விஜய் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவர் கட்சியில் இருப்பவர்கள் அவர் கூட இருப்பது போன்று தெரியவில்லை. விஜய் தன்னை சுற்றி இப்பொழுது இருக்கக்கூடிய சகவாசங்களை கட் பண்ணி விட்டு கொஞ்சம் புதுசா முன்னெடுத்து வைக்க வேண்டும்.அவர் சுயமாக முடிவெடுத்து மக்களுக்காக ஒரு தலைவனாக வெளியே வந்து செயல்பட வேண்டும்.
கரூரில் நிறைய இழப்புகளை, மரணங்களைச் சந்தித்த குடும்பங்கள் கூட விஜய்யின் மேல் இருக்கின்ற நம்பிக்கை இழக்கவில்லை. உண்மையாக சொல்கிறேன் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோள் தான் எல்லாரிடமும் இருக்கிறது. டி.டி.வி.தினகரனிடம் இருக்கிறது. விஜய்க்கும் இருக்கிறது. எல்லாருக்குமே இருக்கிறது. பாஜக, அதிமுக எல்லா கட்சிக்கும் திமுகவை அகற்றும் எண்ணம் இருக்கிறது. அதனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் செயல்படுவது தான் சிறப்பாக இருக்கும். விஜய்யின் தலைமையில் ஒரு கூட்டணி என்பது சரியாக வராது'' என்றார்.