''It was a theft from the start'' - Durai Vaiko Photograph: (DURAI VAIKO)
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பூதாகரமானது. தொடர்ந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மல்லை சத்யா ’திராவிட வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். இந்த விழாவில் மதிமுகவில் இருந்து வெளியேறிய, வெளியேறப்பட்ட முக்கிய நிர்வாகிகளான அழகு சுந்தரம், நாஞ்சில் சம்பத், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், ''தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள் அதுபோல ஆரம்பிக்கும் போதே திருட்டு பழக்கத்தோடு ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் அந்த திருட்டு பழக்கம் இருக்க தான் செய்யும். கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சியின் பெயரை களவாடி பண்ணிருக்காங்க. என்ன பண்றது?'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''அரசியல் காரணங்களுக்காக மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளது என்பது பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் சொன்ன பதிலிலிருந்தே தெரிகிறது. ஆட்சி மாறினால் நாங்கள் இந்த மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொன்னால் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் மறுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களே தங்கள் வாயால் சொல்கிறார்கள். இது மிக தவறானது. நான் அரசியலாக பார்க்காமல் பொதுவாக நான் சொல்வது மக்கள் உங்களை நம்பி ஓட்டு போடுறாங்க அது திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாகே இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் ஜனங்களுக்காக பண்ணுங்க'' என்றார்.
Follow Us