'பாமக, விசிக ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நல்லது'-செல்வப்பெருந்தகை பேட்டி

புதுப்பிக்கப்பட்டது
a4250

selvaperunthagai Photograph: (congress)

பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகாரமோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்து வருகிறார்.

நேற்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு ராமதாஸ் மீது ஏன் இந்த திடீர் பாசம். வன்னியரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கும் ராமதாஸ் மீது ஏன் இந்த திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸை என்றைக்காவது திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார். ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பதும் என எல்லாமே திமுகவின் சூழ்ச்சி தான்.

 

A24
pmk Photograph: (pmk)

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் ஐயாவாக இல்லை ஒரு குழந்தை போல் மாறிவிட்டார். ராமதாஸ் ஐயாவாக எதை செய்யச் சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். ஆனால் அவர் இப்பொழுது ஒரு குழந்தையை போல் மாறிவிட்டார். எனவே அவரை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். ராமதாஸிற்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என 12 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து இருந்தேன். ராமதாஸ் உடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுயநலத்திற்காக அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனாலேயே பாமக தலைவர் பொறுப்பை ஏற்றேன். 2024 தேர்தலில் தந்தை ராமதாஸ் சொல்லி தான் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போதே ராமதாஸ் சொல்லி இருந்தால் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என ஏன் சொல்லப் போகிறேன்?" என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''முன்பு கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரங்கள், தீவைப்பு என  விசிக, பாமக இடையே மோதல்கள் இருந்தது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவும், விசிகவும் கூட்டணி வைத்த பிறகு, ஒரு கூட்டணியில் வந்த பிறகு கலவரங்கள் குறைந்து இருக்கிறது. சரிபாதியாக குறைந்தது என்பதை மறுக்க முடியாது. அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது. ஆனால் ஏற்கனவே விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருந்தவர்கள் தான். இதில் என்ன பிரச்சனை. விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருந்தால் இரண்டு சமூகத்திற்கும் நல்லது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்றார்.

anbumani ramadoss DR.RAMADOSS pmk Selvaperunthagai vck
இதையும் படியுங்கள்
Subscribe