'It has disappeared...' - Seeman's sensational petition in court Photograph: (seeman)
என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் தாக்கல் செய்துள்ள மனுவில், 'என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதால் என்னுடைய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். நிலுவையில் உள்ள குற்றவழக்குகளை சுட்டிக்காட்டி தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் ' என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீமான் தாக்கல் செய்த மனு மீது மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 22 ஆம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளது.