IT employee kidnapping case; Lakshmi Menon caught in the crossfire of investigation Photograph: (kerala)
எர்ணாகுளத்தில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகாரில் நடிகை லட்சுமி மேனனை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. காரை வழிமறித்து தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் பிரபல நடிகை லட்சுமிமேனனின் நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான அந்த வீடியோ காட்சியில் லட்சுமி மேனனும் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.