Advertisment

மின்வாரிய பணியாளர் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

pdu-eb-man

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பைப் லைன் நகரில் மின் கம்பிகளில் உரசி மின்சாரம் செல்ல தடையாக இருந்த மரக்கிளைகளை மின் பணியாளர்கள் சரத்குமார் உள்பட இருவர் அகற்றியுள்ளனர். அதே போல் ஒரு வீட்டின் வாசலில் நின்ற ஒரு மரத்தில் இருவரும் ஏறி மரக்கிளைகளை வெட்டி அகற்றி உள்ளனர். அப்போது அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் சரவணன் என் வீட்டு வாசலில் உள்ள மரங்களை என்னிடம் கேட்காமல் எப்படி வெட்டலாம் என்றும் வந்த இருவரும் மேலே ஏறி வெட்டுகிறீர்கள் கீழே யாரும் இல்லை ஒருவர் நின்று வரும் வாகனங்களை ஒதுக்கிவிடலாம். நீங்கள் மரக்கிளை வெட்டி கீழே விழும்போது வாகனங்களில் வருவோர் மீது விழுந்தால் என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

Advertisment

அப்போது அங்கு மது போதையில் வந்த ஜெகதீஷ்வரன் மரங்களில் இருந்த மின் பணியாளர்கள் மீது கல்வீசி இறங்கச் சொன்னதுடன் அவர்கள் இறங்கியதும் கட்டையை எடுத்துக் கொண்டு தாக்கி மின் பணியாளர் சரத்குமார் கன்னத்திலும் அறைந்துள்ளார். இந்த சம்பவங்களை அங்கிருந்த மற்றொரு மின் பணியாளர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது அறந்தாங்கி பகுதியில் வைரலாக பரவி வருகிறது. 

Advertisment

மேலும், மின் பணியாளர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மின் பணியாளர் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலிசார், இருவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெகதீஷ்வரனை கைது செய்துள்ளனர்.

arrested incident police Pudukottai TANGEDCO tneb
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe