Advertisment

ஒரே நேரத்தில் குறிவைக்கும் இஸ்ரேல், அமெரிக்கா-உலக நாடுகள் பதற்றம்!

1010

war Photograph: (world)

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை கடந்த வியாழக்கிழமை (26-02-26) அன்று ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி அப்பாஸ் தலைமையிலான குழுவினர் மற்றும்  அமெரிக்கத் தரப்பில் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையை ஓமன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்  பத்ர அல்புசைதி ஒருங்கிணைத்தார்.

Advertisment

இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. மேலும், முறையான, பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டப்பட்டால் ஒரு இறுதிக்கட்ட முடிவிற்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

Advertisment

இந்தநிலையில் இன்று (28-02-26) ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தற்போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இஸ்ரேல் தனது வான் வழியை மூடியுள்ளது. மேலும், தங்கள் வான்வழி போக்குவரத்து தடை விதித்துள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் பதற்றத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்காவும் ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.

world iran israel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe