தனக்கு மயக்கம் வரவழைக்கும் பானத்தைக் குடிக்கக்கொடுத்து, மயங்கிய நிலையிலிருந்த என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார் ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ்" என அமெரிக்க வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகத்தில் புகார் ஒன்று வர, ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
561, கௌரி வழி, MCMINNIVILLE, TN 37110-ஐ சேர்ந்த நீத்தா ஜெயகாந்தன் என்பவர், டென்னஸி மகாணத்திலுள்ள வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகத்தை அணுகி, "எனக்கும், என்னுடைய கணவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்தன. அதுபோக, நிலையில்லாத வேலை, பொருளாதாரப் பிரச்சனைகள். இதுகுறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. இந்நிலையில் டென்னஸி ஈஷா யோகா மையம் பற்றி தெரியவந்து, என் பிரச்சனைகளை மின்னஞ்சலில் தெரியப்படுத்தினேன். சில நாட்களில் ஜக்கி வாசுதேவ் என்னை நேரில் பார்க்க அனுமதித்திருப்பதாகக் கூறினார்கள். அவரைச் சந்திப்பதற்கான நாளுக்காக ஆவலோடு காத்திருந்தேன்.
சுவாமி வரச்சொன்னார் எனக்கூற, மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சென்றேன், தனியறையில் அவர் அமைதியாக தியானத்தில் இருப்பதுபோல் உட்கார்ந்திருந்தார். என் பக்கம் பார்வையை திருப்பிய ஜக்கி வாசுதேவ், "உன்னுடைய கணவனை சூழ்ந்த கெட்ட ஆத்மா உன்னையும் சூழ்ந்துகொண்டிருக்கின்றது. அதனைச் சரிசெய்தால் மட்டுமே பிரச்சனை தீரும். அதற்கு ஒரு சடங்கு செய்யவேண்டும்" என்று பேசிக்கொண்டே, அங்கு ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த செப்பு டம்ளரில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி என்னிடம் குடிக்கக் கொடுத்தார். பிரச்சனை தீர்ந்தால் போதும் என ஜக்கி வாசுதேவ் கொடுத்த அந்த திரவத்தைக் குடித்தேன். அவர் அதற்கடுத்து பேசப் பேச அரைகுறை மயக்கத்தில் கேட்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் ஆடைகள் களையப்பட்டதை அறிந்தேன். ஆனால், போராட முடியவில்லை. வலுக்கட்டாயமாக என்னை அவருடைய பாலியல் துன்புறுத்தல் செய்தார் எனப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கட்டாய உழைப்பு, நிழலான நில ஒப்பந்தங்கள், தீவிர தனிநபர் வழிபாட்டு நடைமுறைகள் போன்றவையும் அடக்கம்.
இதையடுத்து ஸ்பென்சர் பிரையர் என்ற புலனாய்வாளரைக் கொண்ட வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகம் புகாரை தரவாக விசாரித்து, அதற்குண்டான ஆவணங்களைக் கைப்பற்றி, ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் வழக்கினை பதிவுசெய்தது. (வழக்கு எண்: 2025- 01374). இதையடுத்து உள்ளூர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஜக்கி பெயர் அடிபட்டது.
இந்த வழக்கு விவகாரத்தை, "என்னை பாலியல் வன்புணர்வு செய்த ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்னும் அவரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண்கள் புகாரளிக்க வருவார்கள்." என சமூக வலைத்தளத்தில் நீத்தா ஜெயகாந்தன் பதிவிட, அவருக்கு எதிராக டென்னஸி மகாண ஈஷா யோகா மையப் பொறுப்பாளர் செந்தில் கன்னியப்பன், அவதூறு பரப்புகின்றார் என ஷெரீப் அலுவலகத்தில் புகாரளிக்க, வழக்கு முடியும்வரை இதுகுறித்து இருதரப்பும் பேசக்கூடாது என தடைவிதித்தது வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகம்.
ஆனால், அத்தோடு நிற்காமல் அமெரிக்காவின் டென்னஸியிலுள்ள ஈஷா மையம், நீத்தா ஜெயகாந்தன் புகாரால் ஈஷாவின் புகழ் பாதிக்கப்பட்டுள்ளது என்றுகூறி அத்தம்பதி மீது 10 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 2026, ஜனவரி 16-ஆம் தேதி டென்னசியின் SLAPP எதிர்ப்புச் சட்டத்தின் (டென்னசி பொதுப் பங்கேற்புச் சட்டம் - TPPA) கீழ் வழக்கின் அவதூறு பரப்புவதாகக் கூறப்பட்டதை தள்ளுபடி செய்தார். இந்தச் சட்டம் பொதுநலன் சார்ந்த விஷயங்களில் சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்கிறது என்று ஈஷாவுக்கு எதிராகத் தீர்ப்பளித்தார்.
ஈஷாவின் மானநஷ்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதன் விளைவாக, எதிர்மனுதாரரின் அதாவது ஜெயகாந்தன், நீத்தா தம்பதியின் சட்டக் கட்டணங்கள், செலவுகளான 3 கோடி ரூபாயைச் செலுத்த ஈஷா அறக்கட்டளைக்கு உத்தரவிடப்பட்டது. எனினும் இத்தோடு நில்லாமல், வேறுசில பிரச்சனைகளைத் முன்வைத்து ஜெயகாந்தன் தம்பதி மீது ஈஷா அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/a-2026-03-03-15-50-58.jpeg)