Advertisment

'உதயநிதி இளம் பெரியாரா?; அவ்வளவு மலிவா போச்சா?'- நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு

a5831

'Is Udhayanidhi a young man?; Is he that cheap?'- Nanjil Sambadi's harsh attack Photograph: (tvk)

ராணிப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  கலந்துகொண்ட அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

'இளைஞர்கள் எல்லாம் இப்போது திமுக பக்கம் இருக்காங்க என்று அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருக்கிறார்' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு,  ''இதைவிட ஒரு பொய்யை வேற யாரும் சொல்ல முடியாது. இளைஞர்கள் முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்துக் கொண்டு வருகிறோம். திமுகவில் இன்றைக்கு வந்திருக்கிற இளைஞர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய் பேசி அழைத்து வரப்பட்ட இளைஞர்கள். இங்கே வந்திருக்கிற இளைஞர்கள் எல்லாம் விஜய்க்காக தன்னுயிரையும் தருவதற்கும் தயாராக இருக்கும் இளைஞர்கள்'' என்றார்.

Advertisment

'ஒரு மாதத்துக்கு முன்பு விஜய்யை தற்குறி என சொன்னீங்க. அது சம்பந்தமாக சாட்டை துரைமுருகன் உங்களை விமர்சனம் செய்கிறார்' என்ற கேள்விக்கு,''அந்த மாதிரி அனாதைகளுக்குப் பதில்சொல்ல விரும்பவில்லை. அதிமுக அதலபாதாளம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிற கட்சி. அந்த கட்சியில் இருக்கிறவர்கள் சத்தமில்லாமல் தவெகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்கள். மாம்பாக்கம் கூட்டத்தில் கூட அதிமுகவை சேர்ந்த ஒரு தம்பி தவெகவில் இணைந்து கொண்டார். ஆகவே மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பிறகு தவெகவின் தலைவர் விஜய் அவர்களை எம்ஜிஆராக பார்க்கிற அதிமுக தொண்டர்கள் அலை அலையாய், அணி அணியாய் தவெகவுக்கு இணைந்து கொண்டு வருகிறார்கள். ஆகவே, அதிமுகவை காயப்படுத்துவதற்கு நாங்கள் விரும்பவில்லை'' என்றார்.

தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட முக்கியமான தலைவர்களில் நீங்கள் ஒருவர், செங்கோட்டையன் ஒருவர். இது மாதிரி அடையாளம் காணப்பட்ட தலைவர்கள் தற்போது தவெகவில் இணைஞ்சிருக்காங்க. மேற்கொண்டு மற்ற தலைவர்கள் வர வாய்ப்பு இருக்கா?' என்ற கேள்விக்கு, ''தவெகவுக்கு அதிமுகவில் இருக்கும் பாதிப் பேர் வரப் போறாங்க'' என்றார்.

உயநிதியை இளம் பெரியார் என்று அமைச்சர் எ.வ.வேலு போற்றியுள்ளார் என்ற கேள்விக்கு, ''அறியாமையின் அந்தகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.  எவ்வளவு பெரிய கொடுமை பாத்தீங்களா. பெரியார்னா அவ்வளவு மலிவா போச்சா உங்களுக்கு. பெரியார் ஒரே நேரத்தில் எட்டு பதவியை ராஜினாமா செய்தவர். இவர்கள் பதவிக்காகவே உயிர் வாழும் ஜென்மங்கள். இளம் பெரியார்ன்னு உதயநிதியை சொன்னதன் மூலம் பெரியாரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்'' என்றார்.

dmk admk NanjilSampath tvk vijay udhayanidhistalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe