'Is something happening in Delhi?' - Schoolboy predicts car explosion Photograph: (delhi)
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கார் குண்டுவெடிப்புக்கு முன்னதாக நேற்று (10/11/2025) நண்பகலில் ஹரியானாவில் மருத்துவக் கல்லூரியில் சூட்கேஸில் வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisment
இதில் அதீல் அகமது ராதர் என்ற மருத்துவர், முசாமில் ஷகீல் என்ற மருத்துவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் நேற்று நண்பகலிலேயே தலை நகரில் பரவியிருந்தது.
Advertisment
இந்நிலையில்தான் செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, நேற்று (10.11.2025) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதில் உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இதனால் விரைவில் இது தீவிரவாத தாக்குதலா? அல்லது விபத்தா? என இந்த சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரெட்டிட் (reddit ) எனப்படும் தளத்தில் பள்ளி மாணவன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 'நான் என் பள்ளியிலிருந்து (12 மாணவர்) திரும்பி வந்தேன். செங்கோட்டையில் மெட்ரோவில் எல்லா இடங்களிலும் அதிக காவல்துறை, ராணுவம் மற்றும் ஊடகங்கள் மட்டுமே இருந்தன. நான் மெட்ரோவில் பயணித்தபோது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான இராணுவத்தைப் பார்த்தேன். இன்று டெல்லியில் ஏதோ ஒன்று நடக்க இருக்கிறதோ என எண்ணத் தோன்றியது?' என பதிவிட்டுள்ளார்.
மாணவனின் இந்த கணிப்புக்கு பிறகு சில மணிநேரம் கழித்து இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us