'Is one day enough..?' - Kamal's Valentine's Day greetings Photograph: (kamal)
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் வருடம் முழுவதும் தங்களுக்கு பிடித்தமானவர்களிடம் தங்களின் விருப்பத்தை தெரியப்படுத்த முயற்சித்தாலும், இந்த நாளை ஒரு சிறப்பான நாளாக பார்க்கிறார்கள். இந்த ஆண்டு மவுனம் பேசியதே, காதலர் தினம் உள்ளிட்ட திரைப்படங்கள் காதலை தினத்தை ஒட்டி ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பிரபலங்களும் காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''ஒருவர்பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா? அன்புடை நெஞ்சன், கமல்ஹாசன்' என பதிவிட்டுள்ளார்.
Follow Us