பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் 10வது முறையாக பீகாரின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் (வயது 50) அரசியலுக்கு வருகை தர உள்ளதாக வெளியான தகவலையடுத்து, நேற்று (08.03.2026) நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தள கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது கட்சியின் தலை​வரும், மாநிலங்​களவை எம்​.பி.​யு​மான சஞ்​சய் ஜா, பீகார் துணை முதல்​வர் விஜய் சவுத்ரி மற்​றும் மூத்த தலை​வர்​கள் உடன் இருந்தனர். முதல்வர் நிதிஷ் குமார் இந்​நிகழ்ச்​சி​யில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இணைந்த பின்னர் தலை​மையகத்​துக்கு வெளியே உள்ள ஜெயப்​பிர​காஷ் நாராயண் சிலைக்கு நிஷாந்த் குமார் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கட்​சி​யில் உறுப்​பின​ராக இணைந்து தீவிரமாக பணி​யாற்​றி, கட்சி நலன்களைப் பாது​காப்​பேன். மேலும், மாநிலங்​களவை தேர்தலில் போட்​டி​யிட எனது தந்தை எடுத்த முடிவை மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஐக்கிய ஜனதா தள கட்​சி​யின் மூத்த தலை​வர் ஹரி நாராயண் சிங் கூறுகையில், “கட்​சி​யின் முன்னணி தலை​வர்​கள் பங்​கேற்ற கூட்டத்​தில், நிஷாந்த் குமாரைத் துணை முதல்​வ​ராக்​கும் வாய்ப்புகள் குறித்து ஆலோ​சனை செய்யப்​பட்​டது. நிதிஷ் குமார் தலைமை​யில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில், நிஷாந்த் குமாரை துணை முதல்​வ​ராக்க கட்சி​யின் எம்.​எல்​.ஏ.க்​கள் மற்​றும்​ எம்​.பி.க்​கள்​ அனை​வரும்​ ஒரு​மன​தாக முடிவு செய்துள்ளனர்​” என்​று தெரிவித்தார்​.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/09/nithishkumar-son-joins-jdu-party-2026-03-09-14-49-39.jpg)
ஏற்கனவே, தனது மகனை அரசியலுக்கு கொண்டுவருவது குறித்து நிதிஷ்குமார் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை பா.ஜ.க.விற்கு விட்டுத் தர முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் தனது மகனைத் துணை முதல்வராக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஐக்கிய ஜனதா தள கட்​சி​யினர் எடுத்துள்ள முடிவு, நிஷாந்த்குமார் நிச்சயம் துணை முதல்வராக வாய்ப்பிருப்பதை உணர்த்துகிறது. பீகார் சட்டமன்றத்தைப் பொறுத்த வரை, ஐக்கிய ஜனதா தளம் 85 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும், கூட்டணிக் கட்சியான பாஜக 89 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பீகார் சட்டமன்றம் மொத்தம் 243 இடங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Follow Us