நடிகர் அஜித் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கிய அவர், துபாய் தொடங்கி மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து துபாயில் நடக்கும் 24 ஹெச் சீரிஸ் கார் போட்டியில் கலந்து கொள்கிறார்.

Advertisment

இதனிடையே அவர் மோட்டஸ் ஸ்போர்ட்ஸ் பயணத்தின் ஆவணப்பட முன்னோட்டங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அண்மையில் அவரது அணியின் எனர்ஜி பார்ட்னரான ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா குளிர்பானம் விளம்பரத்தில் நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் அஜித்தை அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது முன்னதாக அவர் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்ததை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

'அஜித்குமார் ரேஸிங்' என்ற அணியை உருவாக்கி பல்வேறு நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் துபாயில் உள்ள புகழ்பெற்ற கார் ரேஸ் மையத்தில் நடக்க உள்ள கார் ரேஸில் அஜித்குமார் காரில் கட்டணம் கட்டி அவருக்கு அருகே பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோ டிரோவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 86,500 ரூபாய் கட்டணம் செலுத்தி அவருடன் ரேஸ் காரில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.