"Is it necessary at this time? It is the BJP that is changing the paradigm" - Durai Vaiko alleges
எஸ்.ஆர்.ஆர் விஷயத்தில் பாஜகதான் மடைமாற்றம் செய்வதாக மதிமுக எம்பி துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக எம்பி துரை வைகோ பேசுகையில், ''எஸ்.ஐ.ஆரை கொண்டுவந்து மடைமாற்றம் செய்வது பாஜகவும், அதனுடைய நிர்வாகிகளும்தான். எஸ்.ஐ.ஆரையே நான் தப்பென்று சொல்லவில்லை. ஆனால் அதை எப்படி அவர்கள் செயல்படுத்துகிறார்கள், எந்த காலகட்டத்தில் அதை செயல்படுத்துகிறார்கள் என்பதைத் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். எஸ்.ஐ.ஆர் போன்ற நடவடிக்கைகள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளது. அது ஒரு வருஷம், இரண்டு வருஷம், ஒரு மூன்று வருஷத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கும். இப்போது ஒரே மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதை எப்படி செய்ய முடியும். இதை அவசரப்பட்டு செய்வதால் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் செயல்படும் பொழுது குழப்பங்கள் வரும்.
எஸ்.ஐ.ஆரின் நோக்கம் தகுதியுள்ள வாக்காளர்கள் அதில் இடம்பெற வேண்டும். தகுதி இல்லாத வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு முழுவதும் எதிர் எதிர்மறையாக ஒரு மாசத்துக்குள்ள அவசரப்பட்டு செயல்படும் போது, தகுதி உள்ள வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதி இல்லாதவர்கள் சேர்க்கப்படுவதற்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கு. குறிப்பாக வருவாய்த்துறை அதிகாரிகள், மற்ற அரசு ஊழியர்கள் என்ன சொல்லி வருகிறார்கள் என்றால் 'நாங்க காலையில முழுதும் வேலை பார்க்கிறோம். அதுக்கப்புறம் 6 மணிக்கு மேல் எஸ்ஐஆருக்கு டியூட்டி போட்டுருக்காங்க. எப்படி எங்களால் பணி செய்ய முடியும். பணிச்சுமையா இருக்கிறது' என்கிறார்கள். அவங்க சொல்வதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது.
இந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு வட மாவட்டங்களில் பருவ மழையால் எவ்வளவு நிறையச் சேதாரம் ஏற்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நிர்வாகம் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பது தெரியும். மழை பாதிப்புகளை பார்க்காமல் மாவட்ட நிர்வாகம் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையில் ஈடுபடுவார்களா? அதே மாதிரி பிஎல்ஓவாக இருப்பவர்களைப் பொறுத்தவரைக்கும் பலருக்கு சரியான பயிற்சி, தெளிவு இல்லை. வாக்காளர் பலபேர் சந்தேகங்கள் எழுப்புகிறார்கள். அந்த சந்தேகங்களை தீர்க்கக்கூடிய அந்த தெளிவு கிடையாது.
பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் நடக்கும்போதே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு இதுவரைக்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் பல கேள்விகள் கேட்டா அதற்குண்டான முறையான பதில்கள் கிடையாது. அதை விட்டுவிட்டு இன்னைக்கு பாஜகதான் அதை மடை மாற்றம் செய்கிறது'' என்றார்.
Follow Us