Is it a plant...? Is it a tree...? - Man arrested for growing cassava at home with fertilizer Photograph: (namakkal)
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு ரயில் நிலையங்களில் பிடிபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிற நிலையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நாமக்கல்லில் வீட்டிலேயே ஒருவர் 12 அடி உயரத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செங்கோடு தொண்டிகரடு என்ற பகுதியில் வசித்து வரும் ஓம் பிரகாஷ் என்ற வடமாநிலத்தவர் வீட்டில் கஞ்சா செடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்ததில் ஓம் பிரகாஷ் வீட்டில் இருந்தது செடியா அல்லது மரமா என சந்தேகிக்கும் அளவிற்கு சுமார் 12 அடி உயரம் கொண்ட ஒரு கஞ்சா செடி இருந்தது. மேலும் வீட்டைச் சோதனை செய்ததில் போதை சாக்லேட்டுகள் இருந்தது தெரிந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Follow Us