Advertisment

2026 ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் இவர் இடம் பெறுகிறாரா?

புதுப்பிக்கப்பட்டது
Admk

ராஜ்யசபா தேர்தலில் கட்சியின் விசுவாசிகளுக்கு அந்த தலைமை முடிவெடுத்து வேட்பாளராக களம் இறக்கி விடுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் 2026-ல் நடைபெறப் போகும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவில் இடம் பெறப்போகும ஒரு முக்கிய புள்ளியின் பெயர் அடிபட்டுகிறது.

Advertisment

2026  ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவோட மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் சரவணப்பெருமாள் பெயர் நிச்சயம் இடம்பெறும் என பேச்சு அடிபட்டு வருகிறது. ஏற்கனவே 2013-ல் ஜெயலலிதா இருக்கும் போதே மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பெயர்களில் இவரோட பெயர் அடிபட்டது. அப்புறம் 2025-ல் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் எடப்பாடி இவர் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது இவருக்கு ராஜேந்திரபாலாஜி ஆதரவு வலுவா இருந்து. ஆனால் கடைசி நேரத்தில் இன்பதுரை பெயர் அறிவிக்கப்பட்டு அந்த வாய்ப்பு நழுவி போய் விட்டது.

Advertisment

Sara
சரவணப்பெருமாள்

அப்போது பல கட்சிகளிலிருந்து அழைப்பு வந்த போதும், தாய் கழகத்தில் தான் நீடிப்பேன் என அந்த வாய்ப்புகளை ல்லாம் மறுத்து வந்தவர். கட்சியில் நீண்டகாலப் பங்களிப்புக்காகவும் அவரது வ.உ.சி. ரத்ததான கழகத்தின் பங்களிப்புக்காகவும் கவனிக்கப்பட்டு வரும் சரவணப்பெருமாளின் பெயர் 2026-ல் மாநிலங்களவைத் தேர்தலின்போது நிச்சயம் இடம்பெறும் என்று அ.தி.மு.க.வுக்குள்ளேயே வலுவான பேச்சு அடிபட்டு வருகிறது.

RajyaSabha eps admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe