ராஜ்யசபா தேர்தலில் கட்சியின் விசுவாசிகளுக்கு அந்த தலைமை முடிவெடுத்து வேட்பாளராக களம் இறக்கி விடுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் 2026-ல் நடைபெறப் போகும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவில் இடம் பெறப்போகும ஒரு முக்கிய புள்ளியின் பெயர் அடிபட்டுகிறது.
2026 ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவோட மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் சரவணப்பெருமாள் பெயர் நிச்சயம் இடம்பெறும் என பேச்சு அடிபட்டு வருகிறது. ஏற்கனவே 2013-ல்ஜெயலலிதா இருக்கும் போதே மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பெயர்களில் இவரோட பெயர் அடிபட்டது. அப்புறம் 2025-ல் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் எடப்பாடி இவர் பெயரை அறிவிப்பார்என்று எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது இவருக்கு ராஜேந்திரபாலாஜி ஆதரவு வலுவா இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இன்பதுரை பெயர் அறிவிக்கப்பட்டு அந்த வாய்ப்பு நழுவி போய் விட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/15/sara-2025-10-15-11-58-42.jpg)
அப்போது பல கட்சிகளிலிருந்து அழைப்பு வந்தபோதும், தாய் கழகத்தில்தான் நீடிப்பேன் என அந்த வாய்ப்புகளைஎல்லாம் மறுத்து வந்தவர். கட்சியில் நீண்டகாலப் பங்களிப்புக்காகவும் அவரது வ.உ.சி. ரத்ததான கழகத்தின் பங்களிப்புக்காகவும் கவனிக்கப்பட்டு வரும் சரவணப்பெருமாளின் பெயர் 2026-ல் மாநிலங்களவைத் தேர்தலின்போது நிச்சயம் இடம்பெறும்என்று அ.தி.மு.க.வுக்குள்ளேயே வலுவான பேச்சு அடிபட்டு வருகிறது.