Advertisment

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைகிறாரா?

sengottaiyan-pm-3-file

முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் கூட்டாகப் பங்கேற்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். 

Advertisment

எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதே போல், செங்கோட்டையன் திமுகவின் பி-டீம் என்று எடப்பாடி பழனிசாமியும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

அதாவது செங்கோட்டையனை த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும்  அக்கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே செங்கோட்டையன் நாளை மறுநாள் (27.11.2025) த.வெ.க. வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விஜய் உடனான பேச்சுவார்த்தையானது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ முடிவை செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் வரும் 30ஆம் தேதி, செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார். எனவே அதற்கு முன்பாக தன்னுடைய நிலைப்பாட்டை செங்கோட்டையன் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

john arokiasamy Aadhav Arjuna tvk vijay Tamilaga Vettri Kazhagam admk K. A. Sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe