இரு சக்கர வாகனம் கடன் வழங்கிய ஐடிஎப்சி தனியார் வங்கியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிதம்பரம் டிஎஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி பிரதீப்பை, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முகமது யூனுஸ், பரங்கிப்பேட்டை ஜமாத் நிர்வாகி முத்துராஜா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர். அதில் சிதம்பரம் நகரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் வண்டிகேட் பகுதியில் உள்ள சுசுகி ஷோரூமில் புதிய இருசக்கர வாகனங்களை ஐடிஎப்சி தனியார் வங்கி கடன் மூலம் வாங்கியுள்ளனர்.
இந்த தவனை கடனை அங்கு பணியாற்றும் வங்கி ஊழியர் ரவீந்தர், கடன் பெற்றவர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அவர்கள் கட்டும் தவணைத் தொகையை பெற்றுக்கொண்டு போலியாக ரசிது கொடுத்துள்ளார். பின்னர் வங்கியில் இருந்து தவனை பணம் கட்டவில்லை என தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து கடன் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வங்கி நிர்வாகம் அவரை பணியில் வைத்துள்ளது. இதனால் இவர் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அப்பாவி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றி வருகிறார். இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு கொடுத்த பணத்தை பெற்றுத்தர நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/chi-2026-02-17-21-36-45.jpg)