Advertisment

இரிடியம் மோசடி சம்பவம்; கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

arrest

Iridium scam incident in Krishnagiri

நாட்டில் சில நபர்கள் பலவிதமான மோசடி சம்பவங்களை, பல நேரங்களில் அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில், சில ஆண்டுகளாக இரிடியம் மோசடி குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. பின்னர், இந்த இரிடியத்தை வைத்து பலர் பண மோசடி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த மோசடியில், பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை அபகரித்த, மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

Advertisment

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் மூலமாக இரிடியம் விற்று பணம் பெற்றுத் தருவதாகப் பல மாநிலங்களில் மோசடி சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. இதில் பெரும்பாலானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய்கள் அளவிலான பண மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று கோடி ரூபாய்கள் வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

இந்த மோசடி சம்பந்தமாக, பீகாரைச் சேர்ந்த சோனுகுமார்துபே (29) மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் (35) உட்பட 6 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் நாடு முழுவதும் 23 பேர்களிடம் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் மோசடி செய்த பணத்தின் மதிப்பு 5 கோடியே 65 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Scam Krishnagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe