அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். மூன்றாவது நாளாக இந்த போர் நீடித்து வரும் நிலையில் ஈரானை பொறுத்தவரை போரை நிறுத்துவதில்லை என திட்டவட்டமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கவிற்கு கூடுதல் சேதங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துல்லியமான தாக்குதலை ஈரான் கையில் எடுத்துள்ளது. குவைத்தில் மூன்று அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் F15 ரக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில் மேலும் இரண்டு விமானங்கள் குவைத் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதில் விமானிகள் சிலர் பாதுகாப்புடன் பாராசூட் உதவியுடன் குதித்து படுகாயமடைந்த நிலையில் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதலால் அடுத்தகட்ட போர் தந்திரங்களை அமெரிக்கா கொண்டு வரும் என்றும், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் வீரியத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அமெரிக்காவுடன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கைகோர்க்கும் நிலையில் அதற்குள் கூடுமான அளவுக்கு அமெரிக்காவிற்கு சேதத்தை ஏற்படுத்த ஈரான் திட்டமிட்டு தாக்குதலை கூட்டியுள்ளது. ஈரானோடு லெபனானும் கைகோர்த்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
மிக அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான 3 அமெரிக்க விமானங்களில் இருந்து குதித்த வீரர்கள் 6 பேரும் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்து கீழே விழும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதேநேரம் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்படவில்லை குவைத் வான்பரப்பில் வந்த விமானங்களை அமெரிக்க விமானங்கள் என தெரியாமல் குவைத் நாடு தான் வீழ்த்தியாக தகவலும் வெளியாகி வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/02/1016-2026-03-02-17-10-40.jpg)