Advertisment

உலகின் மிக உயர கோபுரமான புர்ஜ் கலிஃபா மீது ஈரான் தாக்குதல்!

burjkhali

Iran hits Burj Khalifa in dubai, the world's tallest tower

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் இன்று (28-02-26) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இதனால் தெஹ்ரானில் புகை மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன, மேலும் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் 36 மாணவிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. மேலும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்க நட்பு நாடுகளான இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதனால் பிராந்தியத்தில் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்பதால், வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடக்கும் போரில் வளைகுடா நாடுகள் சிக்கியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இன்றிரவுக்குள் சரணடையவில்லை என்றால், மரணமடைவீர்கள் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஆயுதப்படைகள் மற்றும் அனைத்து காவல்துறையினர் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் உலகின் மிக உயரக் கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா அருகே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. துபாயில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் படைத் தளங்கள் மீது ஈரான் கடந்த சில மணி நேரங்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி துபாயின் குடியிருப்பு பகுதி மற்றும் மருத்துவமனைகளை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் உலகின் மிக உயரக் கட்டடமான புர்ஜ் கலிஃபா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள முக்கிய அரசு கட்டடங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

israel America iran dubai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe