அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisment

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நடக்கும் மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும்இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார். அதே போன்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சையித் அப்தோல்ரஹீம் மௌசவி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஸீஸ் நாசிர்ஸதேஹ் ஆகியோரும் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் இந்த போர் சூழலால், உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

இந்த நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆபிரஹாம் லிங்கன் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் அருகே உள்ள அரபிக்கடல் பகுதியில் அமெரிக்கா ஆபிரகாம் லிங்கம் விமானம் தாங்கி போர்க்கப்பலை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.