காதலியைக் கொன்@விட்டு இந்தியாவிற்கு தப்பிய நபரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அமெரிக்காவில், மேரிலாந்தின் கொலம்பியாவில் உள்ள ட்வின் ரிவர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அர்ஜுன் சர்மா (26) வாழ்ந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி 2 அன்று எலிகாட் சிட்டியை சேர்ந்த தன் காதலியான நிகிதா கோடிஷாலா(27) காணாமல் போனதாக ஹாவர்ட் கவுண்டி காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் அளித்த கையேடு சர்மா இந்தியாவிற்கு வந்துவிட்டார். இது காவல்துறையினருக்கு சர்மா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த புகாரில் கடைசியாக தனது காதலியை தனது குடியிருப்பில் கடந்த டிசம்பர் 31 அன்று பார்த்ததாக குறிப்பிட்டிருந்தார். எனவே புகாரில் கடைசியாக தனது காதலியை தனது குடியிருப்பில் பார்த்ததாக சர்மா காவல்துறையிடம் தெரிவித்திருந்த இதையடுத்து, ஜனவரி 3 அன்று காவல்துறையினர் மேரிலாந்தில் உள்ள சர்மாவின் அடுக்கு மாடி குடியிருப்பின் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த குடியிருப்பில் நிகிதா இறந்து கிடந்தார். பல கத்திக்குத்து காயங்களுடன் காவல்துறையினர் நிகிதாவின் உடலை மீட்டுள்ளனர். 

Advertisment

இதுகுறித்து காவல்துறை தரப்பில், டிசம்பர் 31 அன்று இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். அன்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் சர்மா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சர்மா இப்போது இந்தியாவுக்கு சென்று விட்டார். அதனால் இந்திய தூதரகத்தை அணுக உள்ளோம். சர்மாவைக் கண்டுபிடித்து கைது செய்ய அமெரிக்காவின் மத்திய சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் -ல் உள்ள இந்தியத் தூதரகம், "நிகிதாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடனும் தூதரகம் தொடர்ந்து பேசி வருகிறது" என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த சம்பவம் குறித்து நிகிதாவின் சகோதரி சரஸ்வதி கோடிஷாலா, "அர்ஜுன் சர்மா டிசம்பர் 27 அன்று தன்னிடமும், நிகிதாவிடமும் பணம் கேட்டதாகவும். நிகிதா  4,500 அமெரிக்க டாலர்களை சர்மாவுக்கு அனுப்பியதாகவும், அதில் 3,500 டாலர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ள 1,000 டாலர்கள் திருப்பி தரப்படவில்லை" என்றும் அவர் கூறினார். மேலும், ஜனவரி 2 அன்று சர்மா மீண்டும் தன்னிடம் பணம் கேட்டுத் தொடர்பு கொண்டதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும், மேலும், சர்மா ஜனவரி 4, 2026 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தியாவை அடைந்தார்" என்றும் கூறினார். 

இந்த தகவலை வைத்து பார்க்கும் போது, மீதமுள்ள பணத்தைப் பெறுவதற்காக நிகிதா டிசம்பர் 31 அன்று சர்மாவை சந்தித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சமயத்தில் தான் இந்த கொடூர செயல் அரங்கேறியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில்  நிகிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து 3,500 அமெரிக்க டாலர் தொகையை அங்கீகரிக்கப்படாத முறையில் அவர் பரிவர்த்தனை செய்துள்ளார் என்றும்  கூறப்படுகிறது.

தெலுங்குப் பெண்ணான நிகிதா கோடிஷாலாவைக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி ஓடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் சர்மா,தற்போது தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதன் மூலம் சர்வதேச தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து நிகிதாவை கொன்றதற்கான காரணம் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.