International Women's Day celebration at the women's police station in Chidambaram
சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா இன்று (07-03-26) கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியரும், சமூக ஆர்வலருமான டிஎஸ்எஸ்.ஞானகுமார் தலைமை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சிதம்பரத்தை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் எஸ்.பத்மினி கலந்து கொண்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி அவர்களின் பணிகளின் சிறப்புகள் குறித்து பேசி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஜரீனா, ஆர்.கவிதா, என்.கலைவாணி, வி.மஞ்சுளா, கே.செங்கனி, டி.வசந்தகுமாரி, என். சாந்தி, என். பிருந்தாவதி, ஜெ. ஜீவா, கே. கற்பகம், கே. கலைமதி, எஸ். சங்கவி மற்றும் கெளரி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவில் சமூக ஆர்வலர் கார்த்திக்ராஜா நன்றி கூறினார்.
Follow Us