சென்னை  கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.02.2026) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டி அதற்கானப் பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் 

Advertisment


மேலும் கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்று வந்த வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு சன்மார்க்கிகளுக்கு விருதுகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வள்ளலார் மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்தவள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாமையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலாரின் வழியில் தமிழக அரசு செயல்படுகிறது. 

Advertisment

அன்பு வழியை போதித்த வள்ளலாரின் வழியில் ஏழைகளின் பசியை போக்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்துலக வள்ளலார் மாநாட்டு வளாகத்தில் கொடி ஏற்றினார். இதனையடுத்து சேத்துப்பட்டு - நேரு பூங்கா அருகில் சமரச சுத்த சன்மார்க்க பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.