சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை வர்த்தகம் மையத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் முதல் சர்வதேசமாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வுமாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் மேலாண்மை இயக்குனர் ச. செல்வம் வரவேற்புரை வழங்க,மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு எஸ்.எஸ்.சிவசங்கர் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழிஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தொழில் அதிபர்கள் பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்திற்கும் அரசு அமைப்புகளுக்கும் இடையே மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1. தொழிலாளர் நலத்துறையின் கட்டுமான தொழிலாளர் பயிலரங்கம் மற்றும் மலேசிய நாட்டின் கட்டுமான வளர்ச்சி துறையுடன் இணைந்து கூட்டு தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் திரு. ராமன் ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
2. போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் சாலை போக்குவரத்து பயிலகம் மற்றும் வைத்த நாட்டின் பொது போக்குவரத்து கழகம் ஆகியவற்றுக்கு இடையே சுமார் 2000 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், சாலைப்போக்குவரத்து பயிற்சி நிலையத்தில் இயக்குனர் திரு. கிரந்தகுமார் ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
3. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றம் இணைந்து மாநில அளவிலான அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் நலப் பணிகள் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் திருமதி. சியாமளா கலந்து கொண்டார்.
இதைத் தவிர, சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின்மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்ச்சியான 3,000 இளைஞர்களுக்கு மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரிய பணி ஆணையினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் முன்னாள் ஆணையர் திரு. கிருஷ்ணமூர்த்தி, டான்சம் அமைப்பின் கீழ் இயங்கும் உலகளாவிய பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகர் திரு. ஷானவாஸ்கான் மற்றும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் மேலாண் இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.