இஸ்ரேல்  ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது, இதில் குறிப்பாக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றது அதன் தொடர்ச்சியாக,பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை புதுப்பேட்டையில் இருந்து கொலைகார இஸ்ரேலே போரை நிறுத்து' என்ற முழக்கத்துடன் காசா  மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற்றது.

Advertisment

அமெரிக்க - இஸ்ரேலிய இனப்படுகொலை எதிர்ப்பு முழக்கங்களோடும், பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களோடும் பேரெழுச்சியுடன் பேரணி புறப்பட்டு சென்றது.இந்த பேரணியில் திருமுருகன் காந்தி, இளமாறன், கோவை ராமகிருட்டிணன், திருவள்ளுவன் உள்ளிட்ட கள ஒருங்கிணைப்பாளர்கள் வழி நடத்தினர்.

இந்தியாவுடன் அனைத்து விதமான ராணுவ ஒப்பந்தத்தையும் வர்த்தக ஒப்பந்தத்தையும் அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ள என்றும். நாட்டுடைய விடுதலை தந்தை காந்தி, நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடைபிடித்த வெளியுறவு கொள்கையை ஒன்றிய பாஜக அரசு பின்பற்ற வேண்டும், இந்த கோரிக்கையை முன்வைத்து பேரணி நடைபெற்றது.பேரணியின் நிறைவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை அடுத்தடுத்து கொட்டிய நிலையிலும் கூட்டம் கலையாமல் உணர்வுபூர்வமாக திரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா "பெரியாரின் தடியே அமெரிக்க ஆதிக்க அரசியலை சாய்க்கும் என்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்"இந்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசினார்.

Advertisment

U2
தாம்பரம் யாக்கூப்

நடிகர்கள் சத்யராஜ்"பல சீனு மக்களுக்காக இங்கு வந்துள்ளது எனது கடமை, இது இஸ்லாமிய மக்களுக்காக நடைபெறும் கூட்டம் அல்ல இது மனிதநேயத்திற்கு ஆதரவாக நடைபெறும் பேரணி கூட்டம் என்று உரையாற்றினார். பிரகாஷ் ராஜ்"காசாவில் நடைபெற்று வரும் போருக்கு இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் காரணமல்ல மௌனமாக இருக்கும் இந்திய பிரதமர் மோடியும் காரணமே என்று கொட்டும் மழையில் பாசிச எதிர்ப்பை தீயாய் பேசினார். மேலும் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு" இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன், தீனா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் P.R. பாண்டியன் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் நம்மிடம்" பாலஸ்தீனத்தை உலக நாடுகள் ஐநா சபை தனி நாடாக அங்கீகரித்தது. ஐநாவின் வாக்கெடுப்பில் பாலஸ்தீனக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்குகள் ஆதரவு தெரிவித்துள்ளனர், 10 நாடுகள் எதிர்ப்பு வாக்களித்துள்ளனர், இதில் 12 நாடுகள் இந்த வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளையும்,மனிதநேய மக்கள் கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.

ஏற்கனவே இதைப் போன்ற ஒரு பேரணி நடத்தி கடபிர்ந்த சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் பலத்த பாதுகாப்புடன் பலத்த உளவுத்துறையின் எச்சரிப்புடன் இந்த பேரணியை கண்காணித்தனர்.

Advertisment