Advertisment

இன்ஸ்டா பிரபலம் தற்கொலை முயற்சி-போலீசார் விசாரணை

a4542

Instagram celebrity Ilakkiya attempts - police investigate Photograph: (insta)

 

'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.

Advertisment

இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் இலக்கியா. இன்ஸ்டா பிரபலமான இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அப்போது உடற்பயிற்சிக்காக எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இலக்கியா மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இலக்கியா உடன் இருந்தவர்கள் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிகளவிலான மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றையும் இலக்கியா வெளியிட்டிருந்தார். 

Advertisment

அதில், என்னுடைய சாவுக்கு காரணம் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் தான் காரணம் எனக் குறிப்பிட்டு 'என்னை நம்ப வைத்து ஆறு வருடமாக ஏமாற்றி விட்டார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அதைக் கேட்டால் தன்னை அடிப்பதாகவும். தன்னால்அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' என பதிவிட்டு விட்டு அவர் மாத்திரைகளை உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Chennai model Police investigation insta reel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe