சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் படுக்கை வசதி இல்லாமல் தரையிலேயே படுத்துக்கிடந்த  சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆயிரத்திக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் வார்டில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தவர்கள் படுக்கை வசதி இல்லை என உறவினர்களுடன் வராண்டாவில் படுத்திருந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  மருத்துவமனை சார்பில் கூடுதல் படுக்கை வசதி தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், படுக்கை தட்டுப்பாடு இல்லை என விலக்களிக்கப்பட்டுள்ளது.