Advertisment

‘9 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு’ - வெளியான அதிர்ச்சித் தகவல்!

siren-police

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள எட்டப்பள்ளி தாலுகாவில் உள்ள ஆல்டண்டி டோலா கிராமத்தைச் சேர்ந்த ஆஷா சந்தோஷ் கிரங்கா (வயது 24). இவர்  ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு பிரசவலி  ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆல்டண்டி டோலா கிராமம் பிரதான சாலையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால் போக்குவரத்து வசதி ஏதும் இல்லை. மேலும் அங்கு பிரசவத்திற்கான எந்த மருத்துவ வசதியும் இல்லை. இதனால் தனது சகோதரியின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். எனவே ஜனவரி 1ஆம் தேதி ஆஷாவும் தனது கணவரும் கடுமையான காட்டுப்பாதை வழியாக 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்றுள்ளனர். 

Advertisment

அதே சமயம் எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு கடைசிவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 6 கிலோ மீட்டர் நடந்தே சென்று, பெத்தாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றனர். 9 மாத கர்ப்பிணியாக இருந்த ஆஷா அந்த கடுமையான காட்டு வழியே பயணம் மேற்கொண்டதில், கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால் பெரும் பாதிப்பிற்குள்ளானார். இந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி காலை அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

Advertisment

அப்போது அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஹெட்ரியில் உள்ள காளி அம்மன் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு மருத்துவர்கள் ஆஷாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய தாமதம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தை ஏற்கனவே கருப்பையிலேயே இறந்து விட்டததாகவும் கூறப்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகரித்ததால், ஆஷாவும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

hospital-pregnanant-woman-file

இந்த மரணம் குறித்து விளக்கமளித்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரி, "திடீரென ஏற்பட்ட பிரசவ வலி மற்றும் வழியில் ஏற்பட்ட சிக்கல்கள்  காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம். மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றப் பெருமளவு முயற்சி செய்தனர். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தாலுகா சுகாதார அதிகாரியிடம் இருந்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை  மேற்கொள்ளப்படும்" என்று  தெரிவித்தார்.

hospital incident Maharashtra Pregnant woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe