தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கினர். இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

Advertisment

அப்போது அவர், “எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 15.18% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆருக்கு முன்னதாக 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார். இந்நிலையில் விஜபி மற்றும் நடசத்திர தொகுதிகளில் நீக்கப்பட்ட  வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 

Advertisment

துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலினின்  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89 ஆயிரத்து 241 வாக்காளர்களின் பெயர்களானது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரை முருகனின் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 35 ஆயிரத்து 666 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆலந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 3 தொகுதிகளில் ஆலந்தூரும் ஒன்று ஆகும். 

eps-mic-5

எதிர்கட்சி தலைவர் பழனிசாமியின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 26 ஆயிரத்து 375 வாக்காளர்களின் பெயர்களானது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்  ஒ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் 24 ஆயிரத்து 386 பேர் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி தொகுதியில்  42ஆயிரத்து 119 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment