Advertisment

“சென்னையில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்”- தொகுதி வாரியாக வெளியான தகவல்!

kumarakurupan-ias-sir-draft

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கினர். இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

Advertisment

அப்போது அவர், “எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 15.18% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதாவது எஸ்.ஐ.ஆருக்கு முன் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆவார்கள். எஸ்.ஐ.ஆருக்கு பின் உள்ள வாக்காளர்கள் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் ஆவார்கள். அதில் பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 332 பேர் ஆவார்கள். ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் ஆவார்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7ஆயிரத்து 191 பேர் அடங்குவர். 

Advertisment

மாற்றுதிறனாளிகள் வாக்காளர்கள் 4 லட்சத்து19 ஆயிரத்து 355 பேர் அடங்குவர். இறந்தவர்களின் எண்ணிக்க்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 ஆகும். குடிபெயர்ந்து முகவரி கண்டுபிடிக்க முடியாத நபர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் ஆகும். இரட்டை பதிவுகள் 3 லட்சத்து 39 லட்சத்து 278 பேர் ஆகும். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ,  வாக்குச்சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் வரும் ஜனவரி மாதம் 18ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக, அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். எனவே அந்த முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார். 

archana-patnaik-ias-pm-our

அதே சமயம் எஸ்.ஐ.ஆருக்கு பிறகு சென்னை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். அதில், “சென்னையைப் பொறுத்தவரையில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்த வாக்குகளில் 35.58% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக சென்னையில் 40.04 லட்சம் வாக்குகள் இருந்த நிலையில்,  தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25.79 லட்சம் வாக்குகள் உள்ளன 

தொகுதி வாரியாக பார்க்கையில், “ஆர்.கே.நகர் 56 ஆயிரத்து 916, பெரம்பூர் 97 ஆயிரத்து 345, கொளத்தூர் 1 லட்சத்து 03 ஆயிரத்து  812, வில்லிவாக்கம்  97 ஆயிரத்து 960 பேர் ஆவார்கள். திரு.வி.க. நகர் 59 ஆயிரத்து 43, எழும்பூர் 74 ஆயிரத்து 858, ராயபுரம் 51 ஆயிரத்து 711, துறைமுகம் 69 ஆயிரத்து 824, சேப்பாக்கம் 89 ஆயிரத்து 241, ஆயிரம் விளக்கு 96 ஆயிரத்து 981, அண்ணாநகர் 1 லட்சத்து 18 ஆயிரத்து 287, விருகம்பாக்கம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 824, சைதாப்பேட்டை  87 ஆயிரத்து 228, தியாகராயநகர் 95 ஆயிரத்து 999, மயிலாப்பூர் 87 ஆயிரத்து 668, வேளச்சேரி 1 லட்சத்து 27 ஆயிரத்து 521 பேர் உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archana Patnaik Chennai chennai corporation commissioner election commission of india special intensive revision SIR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe