தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இனைந்தது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் வரும் மார்ச் மாதம் 01ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்வது, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை மறைமுகமாக நடைபெற்று வந்த இந்த ஆலோசனைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நாளை மறுநாள் (26.02.2026) சென்னை வருகை தர உள்ளார். ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் பாஜக தரப்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. 

eps-piush-koyal
கோப்புப்படம்

இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் பா.ஜ.க. தேர்தல் பணிமனையைத் திறப்பதற்காகச் சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் அதிக இடங்களிங்களில் போட்டியிட விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (24.02.2026) மாலை அல்லது நாளை (25.02.2026) காலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

மற்றொருபுறம், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில் அதிமுகவிடம் கூடுதல் தொகுதியைக் கேட்டு பாஜக வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 35 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.