Advertisment

“மை டி.வி.கே.” - த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி குறித்து வெளியான தகவல்!

tvk-my-app

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

Advertisment

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகப் பகுதியாகத் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில் த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கான மை டி.வி.கே, (MY TVK) செயலி தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

Advertisment

அதில் உறுப்பினர் சேர்க்கையின் போது புகைப்படம் எடுத்து தொலைப்பேசி எண்ணைச் செயலியில் பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அதே சமயம் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய வகையிலான ஓ.டி.பி. கேட்கப்படாத வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் எத்தனை வீடுகள் உள்ளன. எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் போன்ற தகவல்கள் இந்த செயலியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் உறுப்பினர் செயலி இன்று (30.07.2025) வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Assembly Election 2026 members Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe