துபாயில் விமானக் கண்காட்சி இன்று (21-11-25) நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்று சாகசம் செய்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானம் தீடீரென கிழே விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானம் தீப்பிடித்து கோர விபத்தானது.
விமானம் விழும்போது எரிபொருளை வெளியேற்ற விமானிக்கு போதிய அவகாசம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் விமானியும் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த கோர விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வடிவமைக்கப்படும் முக்கிய போர் விமானமான தேஜஸ் விமானம் சாகச கண்காட்சியின் போது விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 2,200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போர் விமானங்களை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெருமையாக தேஜஸ் விமானம் இருந்து வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் மிக முக்கியமான போர் விமானம் ஆகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/tejas-2025-11-21-16-25-19.jpg)