கோப்புப்படம்
வாரத்தின் முதல் நாளான இன்று (09.03.2026) இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியோடு வர்த்தகமாகி வருகின்றன. அந்த வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டு வர்த்தகமாகி வருகிறது. அதே போன்று தேசிய பங்குச் சந்தையான நிப்டி 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டு வர்த்தகமாகி வருகிறது.
இந்தத் திடீர் சரிவினால் முதலீட்டாளர்களுக்குச் சுமார் சுமார் ரூ. 12 லட்சம் கோடி முதல் ரூ. 14 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைக் கண்டுள்ளன. அதே சமயம் ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசியச் சந்தைகளும் 7% வரை சரிவைச் சந்தித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மையே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
Follow Us