கிரீன்லாந்தை கைப்பற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிர்ம்ப் விடுத்த மிரட்டலை எடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதே போன்று தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதாவது கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்குப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சுமார் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 25 ஆயிரத்து 170 புள்ளிகளுக்குச் சென்று மீண்டது. மும்பை சந்தையில் வர்த்தகமாகிய 4 ஆயிரத்து 412 நிறுவனப் பங்குகளில் 3 ஆயிரத்து 496 நிறுவனங்களின் பங்குகள் விலைகள் சரிந்து முடிந்துள்ளன. அதாவது 786 நிறுவனப் பங்குகள் மட்டுமே விலை உயர்ந்து வர்த்தகம் ஆகின.
பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 4%, எட்டர்னல் பங்குகள் 3.6%, சன் பார்மா, இண்டிகோ பங்குகள் தலா 3% விலைகள் சரிந்தன. மற்றொரு புறம் தங்கத்தின் விலை 1 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us