ஈரான் மற்றும் அமெரிக்க இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. அமெரிக்காவும் தொடர்ந்து ஈரானை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், ஈரான் அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை. இதன் காரணமாக, ‘ஈரான் ஒப்பந்தத்திற்கு முன் வரவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்"’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை.
இதையடுத்து, கடும் விரக்திக்கு உள்ளான அமெரிக்க, ஈரானை நோக்கிப் போர் விமானம் தாங்கிய போர்க்கப்பலை அனுப்பி வைத்தது. இருப்பினும், ஈரான் இதனை தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தோல்வியில் முடியவே, அடுத்தகட்டமாகப் போருக்கு ஆயத்தமாவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இதற்குப் பதிலளித்த ஈரான், தாங்களும் போருக்குத் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகைக்குத் தகவல் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலை அமெரிக்கா, மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு அனுப்பியது. இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில்,ரஷ்யாவுடன் இணைந்து கடற்படை பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக ஈரான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் எந்த விமானம் கிடைத்தாலும் அந்த விமானத்தின் மூலமாக அந்த நாட்டில் இருந்து வெளியேறுமாறு தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியக் குடிமக்கள் தூதரக உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனவரி 14, 2026 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/india-2026-02-23-19-52-17.jpg)