Advertisment

12 வயதிற்கும் மேற்பட்டோருக்கான டி.என்.ஏ கரோனா தடுப்பூசி: அனுமதி கோரும் ஸைடஸ் காடிலா!

zydus cadila

Advertisment

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் v, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனம், தான் உருவாகியுள்ளஸைகோவி-டி என்ற தடுப்பூசிக்கு அனுமதி கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளது.

ஸைகோவி-டி தடுப்பூசியைக் கொண்டு மூன்றுகட்ட சோதனைகளை நடத்தி முடித்துள்ள ஸைடஸ் காடிலா நிறுவனம், தங்களது தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்குப் பாதுகாப்பானது என தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்ட ஆய்வின்இடைக்கால தரவுகளின்படி, தங்கள் தடுப்பூசிக்கு 66.6% சதவீத செயல்திறன் இருப்பதாகவும்ஸைடஸ் காடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி-டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில்மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் தடுப்பூசி 'நீடில்' (needle) இன்றி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிக்குஅனுமதி தருவது குறித்து விரைவில், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCGI coronavirus vaccine zydus cadila
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe