/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bdfmuioo_mizoram-mnf-zoramthanga-650_625x300_11_December_18-in_0.jpg)
மிசோரம் மாநிலத்தின் முதல்வராக மிசோரம் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் சொரம்தங்கா இன்று பதவியேற்றார். மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மிசோரம் தேசிய முன்னணி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் சொரம்தங்கா இன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இன்று ஆளுநர் முன் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக சொரம்தங்கா மிசோரம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
Follow Us