Advertisment

தாக்கியதாக குற்றம் சுமத்திய பெண்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சொமேட்டோ ஊழியர்!

zomato kamaraj

பெங்களூருவைச் சேர்ந்தஹிடேஷா சந்திராணி என்ற பெண் சில நாட்களுக்கு முன்பு, மூக்கில் வழியும் இரத்தத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சொமேட்டோ ஊழியர் தன்னை தாக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாகவழக்குப் பதிவுசெய்த போலீஸார்,சொமேட்டோ ஊழியர் காமராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில்வெளிவந்தார்.

Advertisment

ஹிடேஷா சந்திராணி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த சொமேட்டோ ஊழியர் காமராஜ், அந்தப் பெண் தன்னை அடிமை என திட்டியதாகவும், தன் மீது செருப்பை வீசியதாகவும் கூறினார். மேலும் அந்தப் பெண் தன்னை தாக்கியபோது தடுக்க முயன்றதாகவும், அப்போது அந்தப் பெண்ணின் மோதிரமே அவர் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், ஹிடேஷா சந்திராணி மீது காமராஜ்காவல்துறையில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார்அந்தப் பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

Bangalore Kamaraj zomato
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe