Advertisment

ஆண்களுக்கு ஊதியத்துடன் ஆறு மாத கால விடுமுறையை அளிக்கும் நிறுவனம்!

இந்திய சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.ஒரு சில ஐடி நிறுவனங்கள் மகப்பேறு பெண்களின் கணவர்களுக்கும் விடுமுறை அளித்து வரும் நிலையில், சோமாட்டோவில் பணியாற்றும் ஆண் ஊழியர்களுக்கும் இந்த சலுகைகளை வழங்கப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குழந்தைகளை தத்தெடுப்பவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனமாக சோமாட்டோ நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உலக முழுவதும் 13 நாடுகளின் உணவுகளை டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது. சோமாட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் தொழிலாளர்களிடம் வரவேற்பைப் பெறும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘புதிதாக குழந்தைப் பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் சம்பளத்துடன் கூடிய 26 வாரம்(ஆறு மாதம்) விடுமுறை அளிக்கப்படும். மேலும், ஒரு குழந்தைக்கு உதவித்தொகையாக சுமார் 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

Advertisment

ZOMATO

இதற்கு பெற்றோர் கடமை விடுமுறை((New Parental Leave Policy) என்று பெயரிட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், ‘சொந்த வாழ்க்கையின் இலக்கும், அலுவலக வாழ்க்கையின் இலக்கும் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போது தான் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்னைப் பொறுத்தவரையில், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுமுறை அளிக்கும் கொள்கையில் சமமற்றத் தன்மை நிலவுகிறது. அதனால் தான் இத்தகைய சலுகைகளை தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்'. சோமாட்டோ நிறுவனத்தை பின்பற்றி இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களும் ஊழியர்களுக்கு இத்தகைய சலுகைகள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

employees Holidays zomato
இதையும் படியுங்கள்
Subscribe